'கிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு...' 'இலவச கான்கிரீட் வீடுகள் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்...' - விவசாயிகள் மகிழ்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் நலன்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர், புயல் மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கு நஷ்டஈடுகளை உடனே அறிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் விஷன் 2023யை பின்பற்றி தமிழகத்தில் முதலீடுகளை ஈர்த்து சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், குடிமராமத்து திட்டத்தையும் விவசாயிகளுக்காக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார், முதலமைச்சர். இதனால், அமோக விளைச்சல் ஏற்பட்டு, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல்களை கொள்முதல் செய்துள்ளது. நாட்டிலேயே அதிக நெல் கொள்முதல் செய்த மாநிலம் என்ற பெருமையை தமிழக எட்டியுள்ளது. நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரணத்தை உயர்த்தி வழங்குமாறும் அதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கியும் முதலமைச்சர் உத்திரவிட்டார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு விவசாய கூலித் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டதுயரங்களை நன்கு அறிந்தவன்  என்று தெரிவித்து வரும் முதலமைச்சர், விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தற்போது விவசாயத் துறை வெற்றி நடை போடுவதாவும் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் முதலமைச்சரின் கான்கிரீட் வீடு திட்டத்திற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்