'கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு...' 'ரூ.50 லட்சம் நிதி உதவி...' 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...'- தமிழக முதல்வர் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவியும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்தவர் பாலு. ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக லாரி ஓட்டிக்கொண்டு வந்த முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தினார்.
வாகனம் இயக்கி வந்த முருகவேல் குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்துவிட்டு ஓட்டுநரை எச்சரித்து அனுப்பி வைத்தார் எஸ்.ஐ.பாலு. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், நள்ளிரவு 02.00 மணி அளவில் மற்றொரு லாரியில் வந்து வாகனச் சோதனை செய்துகொண்டிருந்த எஸ்.ஐ.பாலு மீது ஏற்றிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையே, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், காயம் அடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓவர் நைட்ல ஒபாமா ஆகுறதுனா 'இப்படி' தானா'!?.. திருடனாக சுற்றி திரிந்தவர்... நல்லவனா மாற... 'ஒரே ப்ளான்!.. ஓஹோனு வாழ்க்கை'!.. வாயடைத்துப் போன காவல்துறை!!
- “பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!
- ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...!’ - விடுதலையாகி வெளியே வரும்போதே... அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலாவின் ‘அனல் பறக்கும்’ செயல்!!! - விவரம் உள்ளே!
- மதுரையில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோயில்.. திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி..!
- சார் உங்க ‘Whatsapp-க்கு’ ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்.. உடனே போனை கட் செய்த ‘இளம்பெண்’.. சென்னை தொழிலதிபருக்கு நடந்த அதிர்ச்சி..!
- ‘எங்களை அடிச்சது விவசாயிகள் இல்ல, அடியாட்கள்தான்’!.. காயமடைந்த டெல்லி போலீசார் ‘பரபரப்பு’ தகவல்..!
- நண்பன் செய்த துரோகம்...! 'திடீர்னு உள்ள நுழைஞ்ச போலீஸ்...' 'அங்கயே மொத ட்விஸ்ட்...' - எல்லா திட்டத்தையும் போட்டுட்டு கூடவே இருந்த நண்பன்...!
- 'நான் தான் சுடலை மாடன் வந்திருக்கேன் டா'... 'பைப் கனெக்சனுக்காக நடந்த தகராறு'... சாமியை விரட்ட போலீசார் செஞ்ச சம்பவம்!
- தமிழ்நாட்டையே உலுக்கிய... '4 மணி நேர சம்பவம்'...'தீரன் பட பாணியில் புகுந்த வட நாட்டு கொள்ளையர்கள்'... 'தெறித்த தோட்டாக்கள்'... போலீசார் அதிரடி!
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'