'தனது குடும்பத்தோடு நடந்தே சென்று...' 'வாக்களித்த தமிழக முதல்வர்...' - மொதல்ல 'அந்த விசயத்த' பண்ணிட்டு தான் வாக்களிக்க கிளம்பியுள்ளார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று (06-04-2021) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்களிக்க வந்தவண்ணம் உள்ளனர். சென்னை உட்பட பெரு நகரங்களில் பணிபுரிந்தவர்கள் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றும் விதமாக ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் தனது அம்மாவின் படங்களுக்கு முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

அதன்பிறகு, சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் நடந்தே சென்று தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

வாக்களித்த பின்பு செய் பேசிய முதலமைச்சர், “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், அதில், மன நிறைவோடு ஜனநாயகக் கடமை ஆற்றிவிட்டேன்.

மக்கள் அனைவரும் உற்சாகமாக வாக்குப்பதிவு செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்