'இது நூறு வருஷ கனவு...' 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு...' - அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக்கால் வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாயை உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாயை வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.
ரூ.14,400 கோடியில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.
காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.
மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு'... '50 சதவீதம் தள்ளுபடி'... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- கொரோனா ஊரடங்கு காலத்தில் பதியப்பட்ட ‘10 லட்சம்’ வழக்குகள் வாபஸ்.. முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- 'நீங்கள் அதிகாரிகளை தேடி போக வேண்டாம்'... 'மக்கள் குறைகளை கேட்க மக்களை தேடி வரும் அதிகாரிகள்'... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- ‘நீங்கதான் தீர்வு சொல்லணும் ஐயா’!.. தங்கச்சிக்காக ‘விஜய் ரசிகர்’ முதல்வரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை.. இன்ப அதிர்ச்சி கொடுத்த திருப்பூர் கலெக்டர்..!
- VIDEO: 'ஜெயலலிதா வழியில் அடிப்பிறழாமல்...' 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார்...' - துணை முதல்வர் பன்னீர் செல்வம் புகழாரம்...!
- ‘1100-க்கு டயல் செய்தால் போதும்’.. பொதுமக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.. அசத்தல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்..!
- 'ஐயா, பிப்ரவரி 14 லாக்டவுன் போடுங்கய்யா'... 'முதல்வரிடம் இளைஞர் வைத்த கோரிக்கை'... 'வைரலாகும் வீடியோ'... உண்மை என்ன?
- 'விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு'... 'இனிமேல் பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்'... முதல்வர் அறிவிப்பு!
- 'இந்த உருட்டல் மிரட்டலுக்குலாம் பயப்பட மாட்டேன்...' 'நான் எதையும் சந்திக்க தயார்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
- ‘அவர் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்’!.. சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்..!