"உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவீங்களா?".. வீடியோ காலில் CM கேட்ட கேள்வி.. நெகிழ்ச்சியில் நரிக்குறவ மக்கள் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆவடியில் உள்ள நரிக்குறவ மக்களுடன் வீடியோ காலில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்த வாரம் அந்தப் பகுதிக்கு வருவதாக தெரிவித்தார். மேலும், அவர்களிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றையும் முதல்வர் முன்வைக்க, மகிழ்ச்சியில் அந்த மக்கள் நெகிழ்ந்து போயிருக்கின்றனர்.

Advertising
>
Advertising

ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஆகிறாரா முன்னாள் CSK வீரர்?...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நரிக்குறவ மாணவர்கள்

ஆவடியை சேர்ந்த நரிக்குறவ இனத்தை சேர்ந்த மாணவிகளான திவ்யா, ப்ரியா, தர்ஷினி ஆகியோரை நம்முடைய Behindwoods குழு சமீபத்தில் சந்தித்தது. அப்போது அவர்களுடைய சிரமங்கள் குறித்து மாணவர்கள் பேசினர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாக பேசிய இந்த மாணவிகளின் வீடியோ இணைய தளங்களில் வைரலானது.

பாராட்டிய முதல்வர்

தங்களுடைய வாழ்வியல் சிரமங்கள் குறித்து நம் Behindwoods குழுவிடம் பேசிய ஆவடி இமாகுலேட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் எபினேசர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கே.திவ்யா, ஆவடி நசரத் அகாடமியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ். தர்ஷினி ஆகிய மாணவிகளை நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

முதல்வரிடம் பேசிய மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்துதரும்படியும் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,"தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல. நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்

வீடியோ கால்

இந்நிலையில், பால் வளத்துறை அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் இன்று ஆவடி நரிக்குறவ மக்களின் குடியிருப்புக்கு சென்றனர். அதனை தொடர்ந்து, ஆவடி மாணவிகளிடையே வீடியோ கால் மூலமாக ஸ்டாலின் உரையாடினார்.

அப்போது தங்களது பகுதிக்கு வரும்படி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் முதல்வரிடத்தில் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின்," அடுத்த வாரம் கண்டிப்பாக வந்து உங்களை சந்திக்கிறேன். உங்களது வீட்டிற்கு வந்தால் சாப்பாடு போடுவீர்களா?" எனக் கேட்டார்.

இதனால் உற்சாகமடைந்த மக்கள்," வாருங்கள் உங்களுக்கு கறிசோறு போடுகிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஆஹா.. இன்ஸ்டாகிராம்ல வர இருக்கும் புதிய தொழில்நுட்பம்... மார்க் சொன்ன செம்ம தகவல்..!

TN, TN CM, TN CM STALIN, CM MK STALIN, AVADI SCHOOL, STUDENTS, AVADI SCHOOL STUDENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்