எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம்!.. 'அதிமுக அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப் படுகிறது.
வருடந்தோறும் எம்ஜிஆர் பிறந்த நாளன்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, தலைவர்கள் மரியாதை செலுத்துவது உண்டு.
அவ்வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக கட்சியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் கட்சி கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து ஏற்றி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள், கட்சித் தொண்டர் உள்ளிட்டவர்களுக்கு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்'... 'நானும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'... முதல்வர் அதிரடி!
- “தைப்பொங்கல் திருநாளில் பேரன்போடு..” - பொதுமக்களுக்கு வாழ்த்து சொல்லி, பொங்கல் கொண்டாடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- 'நான் முதலமைச்சர் ஆனது... இப்படி தான்!' - 2017 சம்பவம் குறித்து... போட்டுடைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- சென்னையில் பரபரப்பு!.. உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
- '10, 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு'... அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
- 'நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்'... 'முதல்வர் வேட்பாளர் விவகாரம்'... பாஜகவின் அதிரடி அறிவிப்பு!
- 'ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா!'... ‘தமிழக’ அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு! ‘மகிழ்ச்சிப் பொங்கலில்’ கல்லூரி மாணவர்கள்!
- ‘முதல்வர் வேட்பாளர் பழனிசாமி’!.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன..?
- 'அவர் ஒரு பெண் என்றும் பாராமல்'... 'எவ்வளவு கொச்சையான வார்த்தைகள்'... 'உதயநிதி இப்படி பேசலாமா?'... சசிகலா தரப்பு அதிரடி!
- "இந்த கொரோனா காலத்திலும்.. குவியும் முதலீட்டாளர்கள்!.. 121 ஆயிரம் வேலை வாய்ப்பு".. 2021 ஆரம்பத்திலேயே கலக்கும் தமிழக அரசு!