"கருத்து கணிப்புகளை 'பொய்' ஆக்குவோம்... 'மக்கள்' கரெக்ட்டான 'தீர்ப்பு' வழங்குவாங்க..." 'தமிழக' முதல்வர் 'கருத்து'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, 'மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து, ஆட்சியில் இருக்கும் போதே, அதனை நிறைவேற்றியது அதிமுக அரசு. தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகும் கருத்து கணிப்புகள் பொய்யானவை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடையும் என கருத்து கணிப்புகள் வெளியானது. ஆனால், இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது.

ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும். 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என கூறுகிறார். மழையாலும், புயலாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். மக்கள் தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்' என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்