‘நிறைவேறிய கால் நூற்றாண்டு கனவு’.. தமிழகத்தில் உதயமான 38-வது புதிய மாவட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறையை முதல்வா் பழனிசாமி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

கடந்த மாா்ச் மாதம் 24ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இதனை அடுத்து ஏப்ரல் 7ம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலராக இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோா் நியமிக்கப்பட்டு, எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது எல்லை வரையறைப் பணிகள் நிறைவுற்றதை அடுத்து, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தெற்குவீதியில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் பழனிசாமி இன்று (28.12.2020) சென்னை தலைமைச் செயலத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதன்மூலம் மயிலாடுதுறை பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கனவு நனவாகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்