இறுதிகட்ட பரபரப்புரையில்... திடீரென பேச முடியாமல் தவித்த முதலமைச்சர்... உணர்ச்சிவசப்பட்டு கத்திய மக்கள் கூட்டம்! - என்ன நடந்தது??
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், இறுதி பிரச்சாரத்தின் போது, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, 'பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக, தனிநபர் தாக்குதல் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்தி வந்தனர். அது மட்டுமில்லாமல், தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்தி வரும் கட்சி என்றால் அது திமுக தான். திமுக ஆட்சியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இருந்ததில்லை. மக்களுக்கு சிறந்த ஆட்சி வழங்குவதாக கூறி, ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றை கட்டவிழ்த்த கட்சியும் திமுக தான்.
தங்களது பிரச்சாரத்தின் போது எனது தாயைக் கூட திமுகவினர் பழித்துப் பேசினர். ஒட்டுமொத்த தாய்க் குலத்தையே அவுமானப்படுத்துவது போன்ற பேச்சை திமுக மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின், கட்சியில் உள்ளவர்களின் செயல்களைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.
இப்படிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியில் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?. ஆனால், அதிமுக அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமில்லாமல், பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது' என முதல்வர் குறிப்பிட்டார். இதில், பெண்களுக்கு எதிரான திமுகவின் பேச்சு பற்றி பேசிய போது முதல்வர் பழனிசாமி சற்று உணர்ச்சிவசப்பட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், 'திமுக கட்சி, இந்துக்களையும், அவர்களின் நம்பிக்கையும் நிந்தனை செய்து வருகிறது. ஆனால், அதிமுகவுக்கு இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்று தான். சிறுபான்மையினர் நலன் காக்கும் ஒரே அரசும் அதிமுக தான். திறமையான நிர்வாகத்திற்கான முதல் பரிசையும் வென்ற அரசு அதிமுக அரசு.
அதிமுகவை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் அம்மா ஆட்சி மலரச் செய்து, புதிய வரலாறு படைப்போம். மக்கள் விரோத திமுக கட்சியை தோல்வியுறச் செய்வோம்' என அதிரடி கருத்துக்களை முதல்வர் பழனிசாமி தனது இறுதி பிரச்சாரத்தின் போது பேசினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காமராஜர மெரினால அடக்கம் செய்யணும்னு கேட்டப்போ...' கருணாநிதி அப்போ என்ன சொன்னாரு தெரியுமா...? - தமிழக முதல்வர் விளக்கம்...!
- "'கொங்கு' மண்டலம் என்னைக்கும் 'அதிமுக' கோட்டை தான்... எங்கள அசைக்கவே முடியாது.." 'தமிழக' முதல்வர் 'அதிரடி'!!
- "'திமுக'ல இருக்குற எல்லாரோட பழக்கமும் இதான்.." பிரச்சாரத்திற்கு மத்தியில் 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' பேச்சு!!
- '234 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் ஜெயிக்க போகுது...' 'அதிமுக ஆட்சியில் தான் ஏகப்பட்ட தொழில்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்திட்டு இருக்கு...' - தமிழக முதல்வர் பெருமிதம்...!
- 'சட்டப்பேரவையில் ஒருநாள் கூட லீவு போடாத முதல்வர் நான் மட்டும் தான்...' 'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது யாரு...? - பரப்புரையில் தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
- உங்களுக்கு நியாபகம் இருக்கா...? '1989 மார்ச் 25-ல என்ன நடந்துச்சுன்னு...' இப்போ முதல்வரோட அம்மாவையே 'இப்படி' பேசியிருக்காங்க...! - பிரதமர் மோடி கண்டனம்...!
- 'அந்த கடவுளே எங்க பக்கம் தான்...' 50 வருசத்துக்கு அப்புறம், இப்போ தான் 'அது' நடந்துருக்கு...! - பரப்புரையில் தமிழக முதல்வர் பேச்சு...!
- தமிழகத்தின் ’அனல் பறக்கும்’ அரசியல் சூழலில்... திடீரென ‘மன்னிப்பு’ கேட்டு... பரபரப்பை கிளப்பிய ஆ ராசா... - நடந்தது என்ன??? - விவரம் உள்ளே!
- 'தீவிர' பிரச்சாரத்தின் போது.. திடீரென கண் கலங்கி... பேச முடியாமல் நின்ற 'தமிழக' முதல்வர்.. உடைந்து போன 'பொது' மக்கள்!! நடந்தது என்ன?? - VIDEO
- அதிமுக-வோட 'தேர்தல் அறிக்கைய' தான் மக்கள் விரும்புறாங்க...! 'அவங்க எலெக்சன் வந்தா மட்டும் தான் மக்கள்கிட்ட வராங்க...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...!