'தீவிர' பிரச்சாரத்தின் போது.. திடீரென கண் கலங்கி... பேச முடியாமல் நின்ற 'தமிழக' முதல்வர்.. உடைந்து போன 'பொது' மக்கள்!! நடந்தது என்ன?? - VIDEO

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சி சார்பில், தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதிமுக மற்றும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் சேர்த்து, தமிழக முதல்வர் பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில், அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமாருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக சென்னை மாநகரை மாற்ற அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதில், தமிழகம் தான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றும், முதல்வர் குறிப்பிட்டார்.

மேலும், கிராமத்தில் இருந்து வந்துள்ளதால், என்னால் ஒன்னும் செய்ய இயலாது என ஸ்டாலின் நினைத்து விட்டார் என்றும், ஆனால் தான் எதை நினைத்தாலும் சாதிப்பேன் என்றும், எதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் முதல்வர் பழனிசாமி அதிரடியாக பேசினார்.

தொடர்ந்து, திருவொற்றியூர் தொகுதிக்கு சென்ற முதல்வர், அதிமுக சார்பில் அங்கு போட்டியிடும் குப்பனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுகவைச் சேர்ந்த ஆ. ராசாவின் தனது தாயார் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக, முதல்வர் பழனிசாமி பேச முயற்சித்த போது, பேச்சு வராமல் மக்கள் முன்னிலையில் கண் கலங்கினார்.

 

 

தாயைப் பற்றி தவறாக பேசும் யாரையும் இறைவன் மன்னிக்கமாட்டார் என்றும், ஒரு மாநிலத்தின் முதல்வரையே இப்படி பேசுகிறார்கள் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், இந்த மாநிலத்திலுள்ள சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள் என்றும் பேசினார். தமிழக முதல்வர் கலங்கியதை பார்த்து அங்கிருந்த பொது மக்களும் வேதனையடைந்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்