'எந்த தொகுதியில் யார் வேட்பாளர்...'தீவிர ஆலோசனையில் அதிமுக'!!... விரைவில் வெளியாகும் 'பட்டியல்'??..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலை முன்னிட்டு தீவிரமாக தயாராகி வருகிறது.
இதில், அதிமுக கட்சியுடன் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ள நிலையில், அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக இன்று அறிவித்தது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வது பற்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் தேர்தல் அறிக்கை தயார் செய்வது குறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், பாமகவிற்கு தங்களது கூட்டணியில் 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கியுள்ள நிலையில், அவர்களின் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வது பற்றி, பாமக கட்சி சார்பில் ஜி.கே. மணியும், பாஜகவின் தமிழக தலைவர் எல். முருகன் ஆகியோரின் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதனால், விரைவில் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த தகவல்களை அதிமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Breaking: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
- "'குடும்ப' தலைவிகளுக்கு மாதந்தோறும் 1500 'ரூபாய்'... 'மகளிர்' தினத்தில் 'தமிழக' முதல்வரின் அதிரடி அறிவிப்பு!!
- 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்...' 'தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...' - தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீர் சந்திப்பு...!
- 'சொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...' 'நகைக் கடன் தள்ளுபடி...' - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை, விரைவில் தள்ளுபடி ரசீது...!
- நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... 'அதிமுக' வேட்பாளர் 'நேர்காணல்' குறித்து... 'தலைமை' வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!
- 'தமிழக' சட்டமன்ற தேர்தல்... உறுதியான 'அதிமுக' - 'பாமக' கூட்டணி!!... ஒதுக்கப்பட்ட 'தொகுதி'கள் எத்தனை??..
- "'ஜெயலலிதா' பிறந்தநாளில்.. 'தீபம்' ஏற்றி 'உறுதிமொழி' எடுங்க..." 'முதல்வர்', 'துணை முதல்வர்' கூட்டாக 'வேண்டுகோள்'!!
- 'இது நூறு வருஷ கனவு...' 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு...' - அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்...!
- "இங்க சாதி இல்ல, மதமும் இல்ல... எல்லாருக்கும் பாதுகாப்பா நாங்க இருப்போம்..." 'தமிழக' முதல்வர் அதிரடி 'கருத்து'...
- "யாராலயும் என்ன விலைக்கு வாங்க முடியாது.. அடிமையா நடத்தவும் முடியாது..." தமிழக முதல்வர் அதிரடி 'கருத்து'!!!