'நீங்க தேடி போக வேணாம்'...!!! 'மக்களை தேடி வரும் நடமாடும் அம்மா உணவகம்...!!! ‘அதிரடியாக துவங்கி வைத்தார் தமிழக முதல்வர்’...!!! ‘எங்கெல்லாம் கிடைக்கும்’...!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடமாடும் அம்மா உணவக வாகனங்களை இன்று தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.
ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் விதமாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அம்மா உணவகம் என்ற திட்டத்தை முதன்முதலாக கொண்டு வந்தார். குறைந்த விலையில் கிடைத்த உணவு என்பதால், பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவக திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கொரோனா பொது முடக்க காலத்தில் மற்ற உணவகங்கள் பூட்டப்பட்ட போது மக்களின் பசியைப் போக்குவதற்காக அம்மா உணவகங்களில் இலவசமாகவும் உணவு வழங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தின் அடுத்தகட்டமாக மக்களை தேடிச் சென்று வழங்குவதற்காக நடமாடும் உணவங்களை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில், முதற்கட்டமாக இன்று மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நடமாடும் உணவகங்கள் வடசென்னை, தென்சென்னை மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாளடைவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்தச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணியிடங்கள், பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இந்த நடமாடும் உணவக வாகனங்கள் செயல்படவுள்ளது. நடமாடும் அம்மா உணவக வாகனத்தில் குடிநீர், கைகழுவும் வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பள்ளிகளை திறக்கலாமா?.. வேண்டாமா?.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!.. திடீர் திருப்பம்!.. என்ன காரணம்?
- ‘6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை’...!! ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’...!!! ‘வெதர்மேன் சொல்வது என்ன’???
- 'எனக்கு வேற வழி தெரியல'... 'முதல்வரின் படத்தை நெற்றியில் வரைந்த ஆசிரியர்'... காரணம் என்ன?
- ‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்!’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!
- தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது.. தமிழ்நாடு விழாவில் வழங்கி ‘கௌரவித்த’ முதல்வர்..!
- '2022 வரை இந்த சலுகை'...'கார் வாங்க இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம்'... தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி வரிவிலக்கு!
- 'சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பால்'... 'இன்னும் ஒரு ஏரியாதான் அப்படி இருக்கு!'... 'வெளியான ஹேப்பி நியூஸ்!!!'...
- 'இதுதானா அந்த புதிய கோர்-குரூப்???'... 'அப்போ ரெய்னாவின் நிலை?'... 'சந்தேகத்தை வலுவாக்கியுள்ள தோனியின் பேச்சு!!!'...
- 'அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு?!!'... 'பிரபல CSK வீரர் திடீர் முடிவு!!!'... 'வெளியான பரபரப்பு தகவல்!'...
- சென்னையில் நாளை (03-11-2020)... 'எங்கெல்லாம் பவர்கட்???'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...