“ஹேப்பி பர்த்டே தாத்தானு சொல்லி.. அக்கறையுடன் ஃப்ரைடு ரைஸ் கொடுத்து..” - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தம்முடைய 70வது பிறந்த நாளை வரும் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்த இளம் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வராக இருந்த திமுக மூத்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மகனாவார். மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளதுடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பில் உள்ளார்.

இதனை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு தேர்தல் பிரச்சார பயணத்தின்போது நடந்த விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், தேர்தல் விதிமுறைகள் என்றாலும், கை குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் திரண்டு நின்று அன்பைப் பொழிந்ததாக தெரிவித்துள்ளார்.

அதில், “நான் சாப்பிட்டு இருப்பேனா இல்லையா என்று அக்கறையோடு ப்ரைடு ரைஸ் வாங்கி தனது மகள் கையால் ஒரு தமிழர் கொடுத்தார். அவரது அன்பில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வைக் கண்டேன். அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தாத்தா என்றாள் அந்த மகள். திரண்டு இருந்த மக்களிடமிருந்து முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தது. என்னுடைய பிறந்தநாளை மக்களின் வாழ்த்துக்களால் நினைவு படுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read | ERODE ELECTION : "வாக்கை பெறுபவன் அல்ல.. வாக்கை அளிப்பவன்" - சாமியாரின் ஆன்மீக பேச்சு.! வீடியோ..

MK STALIN, ERODE ELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்