இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்!.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீன ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
லடாக்கில் நடந்த தாக்குதலில். தமிழகத்தைச் சேர்ந்த பழனி (வயது 40) வீரமரணம் அடைந்தார். இவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 22 வருடங்களாக ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.
பழனிக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பழனியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பழனியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பழனியின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீரமரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாழ்வில் சோகம்!'.. விரக்தியால் நடுவானில் விமான ஜன்னலை உடைத்த பெண் பயணி!.. விமானத்தில் பரபரப்பு!
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'
- இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு சீனா சொன்ன பதில் தான் 'ஆணவத்தின் உச்சம்!'
- 'மறுபடியும் மொதல்ல இருந்தா....' 'சீனாவில் 106 பேருக்கு கொரோனா...' 'ஸ்பீடா பரவிட்டு இருக்காம்...' அங்கேயும் லாக்டவுன் சொல்லிட்டாங்க...!
- 'நடிகருக்கு மரண தண்டனை...' 'போதைப்பொருள்' கடத்தியதாக 'குற்றச்சாட்டு...' 'சீனாவின்' செயலால் 'ஆத்திரமடைந்த நாடு...'
- 'மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையிலிருந்து கொரோனா பரவியது எப்படி?'.. சீனாவைப் பிடித்த பிசாசு!
- 'தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையில் உள்ளது'... '3 மாதங்களுக்கு பின்பு என்ன நடக்கும்?'... 'கடுமையான ஊரடங்கு'?... மருத்துவக்குழு பதில்!
- “சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருக்கு!”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க?” - மு.க.ஸ்டாலின் 'சரமாரி' கேள்வி!
- "சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா?".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க!’
- "சீனாவுக்கு வந்த இன்னொரு சோதனை!".. 'கதிகலங்கவைத்த' 18 பேரின் 'மரணம்'.. 189 பேர் படுகாயம்!