VIDEO: 'யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவங்க எல்லார்க்கும் உணவு கிடைக்கனும்!'... அம்மா உணவகத்தில் 'இட்லி' சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நோயின் தீவுரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுவதாகவும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், உணவகங்கள் முறையாக செயல்படுகின்றனவா? உணவு தரமாக வழங்கப்படுகிறதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆய்வு செய்தார்.
சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு இன்று காலை சென்ற முதல்வர், அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்து ஊழியர்களிடம், "உணவு நன்றாக உள்ளது. யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் உணவு கிடைக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாள்தோறும் நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிடுவதாக தெரிவித்தார்.
டெல்லி மத நிகழ்வில் பங்கேற்று ஊர் திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட முதல்வர், இஎம்ஐ வசூலிப்பதை தள்ளிவைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார். கோவையில் ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1,131 பேர்' தமிழகத்துக்கு 'வந்துள்ளனர்'... '515 பேர்' மட்டும் 'அடையாளம்' காணப்பட்டுள்ளனர்... 'மீதம் உள்ளவர்கள்...' 'ப்ளீஸ் நீங்களாகவே வந்துருங்க...' 'சுகாதாரத்துறை வேண்டுகோள்...'
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'ஹலோ பாஸ் என்னது இது'... 'அணிவகுத்த பைக்குகள்'...ஜாம் ஆன 'சென்னையின் பிரபல மேம்பாலம்'!
- கடந்த '24 மணி' நேரத்தில் மட்டும்... இதுவரை இல்லாத 'உச்சகட்ட' உயிரிழப்பு... 'மார்ச்சுவரிகளில்' இடமின்றி 'ட்ரக்குகளில்' உடல்கள்... 'கலங்கி' நிற்கும் 'அமெரிக்கா'...
- 'நேற்று ஒரேநாளில் நிகழ்ந்த அதிர்ச்சி...' 'இரண்டு மாநிலங்களில் இருமடங்கான பாதிப்பு...' 'நாட்டில்' மிக மோசமாக பாதிக்கப்பட்ட 'மாநிலம்'...
- 'என்னங்க ஆன்லைன்ல விஸ்கி வாங்கலாம்'...'சந்தோஷத்தில் ஆர்டர் செய்த மனைவி'...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
- 'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'!
- 'வுஹானில்' இறந்தவர்களின் எண்ணிக்கை 'இதுதானா?'... ஆயிரக்கணக்கான 'அஸ்தி' கலசங்களால் எழுந்துள்ள 'புதிய' சந்தேகம்...
- 'நான் செத்து போயிடுவேன்னு நெனச்சேன், ஆனால்...' 'தயவுசெய்து எல்லாரும் வீட்டுக்குள்ளையே இருங்க...' கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்...!
- 'திடீரென' மாறிய காற்றின் திசையால்... தீயணைப்பு வீரர்கள் உட்பட '19 பேருக்கு' நேர்ந்த 'பயங்கரம்'... கொரோனாவிலிருந்து 'மீள்வதற்குள்' நிகழ்ந்த சோகம்...