‘பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு’... ‘21 வயது நிறைந்தால்’... 'முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோர் அல்லாத ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் சில முக்கியத் திட்டங்களை இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். அதில், `மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து பெற்றோர் இல்லாமல் வளரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் சமூக - பொருளாதாரப் பாதுகாப்பு நலன் கருதி அதற்கான சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டார். அதில் ஆதரவற்று வளரும் பெண் குழந்தைகளுக்கு அவர்களுக்கு 21 வயது பூர்த்தி அடையும் போது 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற மற்றோர் அறிவிப்பையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அரசின் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள வளர்ப்பு பெற்றோருக்கான தொகை 4,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஏன்னா இது வாலிப வயசு!’ .. ‘பெண் காவலரை’ வீடியோ எடுத்த வாலிபர்.. ‘அதுக்கு அப்புறம்’ செய்த அதிர்ச்சி காரியம்!
- “உடம்பு சரியில்லனு அம்மா எனக்கு டீ போட போனாங்க!”.. கதறியழும் மகன்.. கணப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- 'இப்டி கூட தப்பிக்கலாமா?'... 'துரத்தி வந்த யானையை கண்டு'... 'அஞ்சாமல் பெண் செய்த காரியம்'... வைரலாகும் வீடியோ!
- ‘வீட்டில் நடப்பது தெரியாமல்’... ‘டிவி பார்த்துக் கொண்டிருந்த பெண்’... 'பதறியடித்து ஓடிப் போய்‘... ‘பார்த்தபோது நிகழ்ந்த பயங்கரம்!
- ஆன்லைனில் ‘நெயில் பாலிஷ்’ ஆர்டர் செய்த இளம்பெண்.. அடுத்தடுத்து வந்த 5 மெசேஜ்.. பகீர் கிளப்பிய சம்பவம்..!
- '47 ஆண்டுகளுக்கு முன்'... காணாமல் போன கணவரின் 'மோதிரம்'... கொரியர் மூலம் நிகழ்ந்த 'அற்புதம்!'... கதறி அழுத மனைவி... 'பரவசமூட்டும் காதல் காவியம்!'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- “அதெப்படி உங்க வீட்டு முருங்க மரம்.. என் வீட்ல வந்து உரசலாம்?”... வீட்டுக்குள் புகுந்த மாமனார்.. மருமகளுக்கு நேர்ந்த சோகம்!
- ‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- 'மின்னணு பணப்பரிவர்த்தனை (Online Transaction) மூலம் பஸ் டிக்கெட் வாங்கலாமா?!'... தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்... சிறப்பு தொகுப்பு!