நிவர் புயலால் '200 ஏக்கர் நெல் பயிர்கள்.. வாழைத் தோப்புகள் நாசம்!'.. 'உடனே கடலூர் விரைந்து' நிவாரணங்களை வழங்கிய தமிழக முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதி தீவிர புயலான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்த நிலையில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அடித்த மழையால், ஏராளமான பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீட்பு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் கடலூர் விரைந்து நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக ரெட்டிச்சாவடி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், புயலால் வாழைத்தோப்புகளை பறிகொடுத்த வாழை விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இதேபோல், மனம்பாடி என்ற கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியது உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி கேட்டறிந்தார். முதல்வருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை செயலாளர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அத்துடன் புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கியதுடன், புயலால் சேதமடைந்த விசைப் படகுகளையும் பார்வையிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு மெரட்டு மெரட்டிய நிவர் புயல்'.. “அடுத்து எந்த திசையை நோக்கி திரும்பியது?” - வானிலை மையம் அறிவித்த பரபரப்பு தகவல்கள்!
- இப்போதான் ‘நிவர்’ முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா..! வங்கக்கடலில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு நிலை..!
- “மனிதாபிமானமே இல்லாம... புயல் நேரத்துலயா இப்படி பண்ணுவீங்க!”... நிவருக்கு பயந்து உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்ற நேரம் பார்த்து.. வீட்டை குறிவைத்து மர்ம கும்பல் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்!
- ‘கரையை கடந்த நிவர்’.. இனி ‘கனமழைக்கு’ வாய்ப்பு இருக்கா.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘முக்கிய’ தகவல்..!
- கரையை நெருங்கும் 'நிவர்' புயல்... 'சென்னை', 'கடலூர்' உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் 'தீவிரம்'!!!
- ‘புயல் முடிந்ததும்’... ‘நெட்டிசன் வைத்த கோரிக்கை’... ‘உடனடியாக ட்விட்டரில் பதில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’...!!!
- மணிக்கு ‘11 கி.மீ’ வேகத்தில் வரும் நிவர் புயல்.. கரையை கடக்கும்போது காற்று எவ்வளவு வேகமாக வீசும்..? வானிலை மையம் ‘முக்கிய’ தகவல்..!
- 'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?!!'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!!!'...
- '16 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை!!!'... 'நிவர் புயல் எதிரொலியால்'... 'தமிழக அரசு அறிவிப்பு!'...
- ‘நிவர் புயலால் வெளுக்கும் மழை’.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘கோபாலபுரம்’ இல்லத்தில் புகுந்த மழைநீர்..!