"நான் ஒரு ஏழைங்க, எளிமையா தான் இருப்பேன்.. உங்கள மாதிரி எல்லாம் இருக்க முடியுமா??.." ஆ. ராசா விமர்சனத்திற்கு முதலமைச்சரின் பதிலடி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், மிக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

"நான் ஒரு ஏழைங்க, எளிமையா தான் இருப்பேன்.. உங்கள மாதிரி எல்லாம் இருக்க முடியுமா??.." ஆ. ராசா விமர்சனத்திற்கு முதலமைச்சரின் பதிலடி!!

இந்நிலையில், திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஆ. ராசா, பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆ. ராசாவின் பேச்சு, அதிமுக கட்சி மற்றும் தொண்டர்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
tn cm edappadi palaniswami replies to a.raja statement

இந்நிலையில், மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் பழனிசாமி, ஆ. ராசாவின் விமர்சனம் குறித்து பேசினார். அப்போது அவர், 'நான் ஸ்டாலினின் செருப்பை விட விலை குறைந்தவர் என ஆ. ராசா ஒரு கூட்டத்தில் பேசுகிறார். நான் அப்படியே இருந்து விட்டு போகிறேன். நான் விவசாயி. ஒரு ஏழை என்பவன், எளிமையாக தானே இருப்பான்.
tn cm edappadi palaniswami replies to a.raja statement

இதனால், உங்களைப் போல, 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் அப்படித் தான் பேசுவார்கள்.



கண்ணுக்கு தெரியாத காற்றைக் கூட வைத்து ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தான்' என மக்கள் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி கடும் பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்