“தங்கள் தாய்க்கும் அவரைப் போல்”.. ட்விட்டரில் வந்த வீடியோவுக்கு ரியாக்ட் செய்து நெகிழவைத்த தமிழக முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலவச முகக்கவசம் வழங்கிய பெண்ணுக்கு ட்விட்டரில் தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்து நன்றியையும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை எந்தவொரு தமிழக முதல்வர் இல்லாத வண்ணம் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இயங்கியும், அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியும் வருகிறார் என்பது தற்போது பலரின் கருத்தாக உள்ளது. அந்த கருத்தினை மீண்டும் உண்மையாக்கும் வண்ணம் தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, தமது ட்விட்டரின் பார்வைக்கு வந்த ஒரு தன்னார்வலரின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஆம், தூத்துக்குடியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசத்தை கொடுத்துக் கொண்டிருந்த தனது தாயை அவரது மகன் நவபாலன் என்பவர் வீடியோ எடுத்து தமது ட்விட்டரில் பதிவிட்டு, அதில் செய்தி நிறுவனங்கள் மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார்.
இதனை ரிட்வீட் செய்த தமிழக முதல்வர், “தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த
பாராட்டுக்கள்!” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கு' உத்தரவை அமல்படுத்திய... போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 42 பேர் கைது!
- ‘கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான 14 மாத குழந்தை!’.. ‘இந்தியாவையே உலுக்கிய சோகம்!’
- விடுமுறை எடுக்காமல் 'உண்மையை' மறைத்து... வசமாக 'சிக்கிக்கொண்ட' அரசு அதிகாரி... 3 பிரிவுகளின் கீழ் 'வழக்கு' பாய்ந்தது!
- 'என்ன ஒரு புத்திசாலித் தனம்!'.. 'கொரோனாலாம் பக்கத்துலயே நிக்க முடியாது!'.. வீடியோ!
- 'தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் மாற்றம்!'... என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கும்!?... தமிழக அரசு அறிவிப்பு!
- 'ஒருவர் ஊரடங்கை மீறும்போது வரும் அபாயம் என்ன!?'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- 'நீங்களே அம்மாவ அடக்கம் பண்ணிடுங்க...' 'கொரோனா உங்களுக்கு வராது, வாங்கிக்கோங்க...' பெற்ற தாயின் உடலை வாங்க மறுத்த மகன்...!
- 'அமெரிக்காவை' கொரோனா ஆட்டிப்படைக்க... 'இவர்கள்' தான் முக்கிய காரணம்... வெளியான 'புதிய' தகவல்?
- 'இருமல், தொண்டைவலி எதுவுமே இல்ல...' 'கொரோனாவா இருக்காதுன்னு நெனச்சோம், ஆனால்...' 'டெஸ்ட் பண்ணி பார்த்தா கொரோனா பாசிட்டிவ்...!
- 'தமிழகத்தில்' மேலும் 69 பேருக்கு 'கொரோனா!'.. 'உயிரிழந்தோர்' எண்ணிக்கை 7ஆக 'உயர்வு'!