VIDEO: ‘கமலா ஹாரிஸுக்கு’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’... ‘தன் ஸ்டைலில் வாழ்த்தி ட்வீட்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அக்கட்சியின் துணை அதிபராக போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ‘அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு மனம் நிறைந்த வாழத்துக்கள்.

அத்துடன் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் அவர் தமிழகத்தை பெருமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த வரலாற்றுத் தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை அடுத்த துணைத் தலைவராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி என்றும் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மன்னார்குடியை தாய்வழி பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதலாவது பெண் துணை அதிபர், முதலாவது கறுப்பின துணை அதிபர், முதலாவது தமிழ் துணை அதிபர் என்ற பெருமைக்குரியவராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்