“இதெல்லாம் தவறுங்க!”.. “என்ன நெனைச்சுகிட்டு இருக்கீங்க?”.. சட்டப்பேரவையில் “கொதித்தெழுந்த” தமிழக முதல்வர்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிக்கொண்டிருந்தபோது திமுக உறுப்பினர் அடிக்கடி இடையூறு செய்ததால் முதல்வர் ஆவேசம் அடைந்தார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘பேசிக்கிட்டு இருக்குறேன்.. என்னங்க அர்த்தம்? எப்ப பாத்தாலும் எந்திரிச்சு நின்னா.. இதெல்லாம் தவறுங்க.. என்னங்க அர்த்தம்.. எப்ப பாத்தாலும் பேசிகிட்டே இருக்குறீங்க.. என்ன நெனைச்சுகிட்டு இருக்குறீங்க? யார் பேசுனாலும்.. எப்ப பாத்தாலும்’ என்று கொங்கு தமிழில் அத்தனை ஆவேசமாக பேசிய முதல்வர், அவைத்தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க பின்னர் தன் இருக்கையில் அமர்ந்தார்.

இதனை அடுத்து அவை செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட திமுக உறுப்பினர் ஆஸ்டின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் ஆஸ்டினை ஒருநாள் அவையில் இருந்து வெளியேற்றுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் பேசிய முதல்வர், ‘அவர் பேசும்போது நான் இடைமறிக்கவில்லை. அவர் கருத்தை அவர் தெரிவித்தார். என் கருத்தை நான் தெரிவித்தேன். எதற்கு இடையூறு. அதுமட்டுமல்லாமல் அதிமுகதான் அவருக்கு (ஆஸ்டின்) விலாசம் கொடுத்தது. அதனால்தான் நீங்கள்,

இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்’ என்று பேசினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டதால், திமுக உறுப்பினர் ஆஸ்டினுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சபாநாயகர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

EDAPPADIKPALANISWAMI, TAMILNADUCM, ASEMBLY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்