'விபத்துக்குண்டானவருக்கு குளூகோஸ் ஏற்றும் துப்புரவு ஊழியர்கள்' .. வீடியோ வெளியானதால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டத்துக்குட்பட்ட ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ள சிகிச்சை சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்மப்பட்டி அருகே உள்ள மூலப்புதூரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள வீடியோதான் சேலம் பகுதியின் ஆத்தூர் அரசு மருத்துமனையில் எடுக்கப்பட்டதோடு, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை பல தரப்பிலும் உண்டுபண்ணியுள்ளது.

ஒரு துக்க நிகழ்ச்சிக்காக நாகராஜ், அதே பகுதியில் உள்ள தெடாவூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள துப்புரவு ஊழியர்கள் நாகராஜூக்கு குளுக்கோஸ் ஏற்றும் வீடியோவை ஒருவர் எடுத்துள்ளார். இணையத்தில் வலம் வரும் இந்த வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும் இதன் முழு உண்மைத் தன்மை, குளுக்கோஸ் ஏற்றுபவர் துப்புரவு சீருடையில் இருப்பது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எங்கு சென்றார்கள் உள்ளிட்ட பலவற்றுக்குமான விளக்கம் இன்னும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படவில்லை.

HOSPITAL, TREATMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்