VIDEO : 'ஏழை', எளிய மக்களுக்கு 'நலத்திட்ட' உதவிகள்,,.. இன்னும் பல 'திட்டங்கள்' குறித்து 'அதிரடி' அறிவிப்பு வெளியிட்ட தமிழக 'முதல்வர்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று காரணமாக, பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.24 கோடியே 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 844 புதிய திட்டப்பணிகள் மற்றும் அரசு கட்டிடங்களை திறந்தும் வைத்தார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'குடிமராமத்து திட்டம் மூலம் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' என்றார். அம்மாவட்டத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்