'கரிசக்காட்டில் மீண்டும் மருத்துவக் கனவுகள் மலருமா!?'.. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு!.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாத்தின்போது தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும். நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு குறைந்துவிட்டது.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் அறிமுகமான பின்னர், மருத்துவக் கல்லூரியில் சேரும் நிலை குறைந்துவிட்டது. நீட் தேர்வு வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும். அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக இந்த சட்டம் இயற்றப்படும்" என அறிவித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அட்மிஷன் பத்தி யாரும் வாயத் திறக்கக்கூடாது!'.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!.. என்ன நடந்தது?
- 'சார்...' 'ஸ்கூல் பசங்க எல்லாம் சைக்கிள்ள' 'முந்திட்டு போறாங்க...' 'ஊர்ந்து' செல்லும் 'அரசு பேருந்துகள்...' 'இப்படி கூட ஒரு காரணமா?...'
- 'கொஞ்சம் கொஞ்சமா திருடுனா எப்படி கண்டுபிடிக்க முடியும்!?'.. பள்ளிக்கூடம்.. தேவாலயம்... மெக்கானிக் ஷாப்... மாணவன் நீட் ஸ்கெட்ச்!
- 7ம் வகுப்பு வரை "ஆன்லைன்" கல்விக்கு "தடை"!.. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு!.. ஏன்?
- 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு 'மாணவர்களின்' தேர்ச்சி... 'இதை' வைத்துத்தான் முடிவு செய்யப்படுமாம்!
- 'நான் கர்ப்பமா இருக்கேன்'...'கதறிய காதலி'... 'ஆனா நான் ஜாலியா மண மேடையில் இருப்பேன்'... 'கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்'... ஆடிப்போன இளைஞர்!
- 'தடுப்பூசி' கண்டுபுடிக்குற வரைக்கும்... பள்ளிக்கூடம் 'தெறக்க' மாட்டோம்... அதிரடியாக அறிவித்த நாடு!
- "2வது வீட்டுக்காரன் ஓடிட்டான்.. வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் 20 ஆயிரம்.. படிக்கலனா பரவால்ல.. எக்ஸாம்க்கு வந்து கொரோனா வந்தா?".. கதறும் பெண்!
- "10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா!".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்!
- ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!