‘1000 குடும்பம் இத நம்பித்தான் இருக்கு’.. பியூட்டி பார்லரை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உரிய கட்டுப்பாடுகளுடன் பெண்கள் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்கள் அழகு நிலையங்களை உரிய கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வேண்டும் என தமிழக பெண் அழகு கலை நிபுணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 1500 அழகு நிலையங்கள் உள்ளன. இவற்றை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த கடனுதவி அழகு நிலையங்களுக்கும் வழங்க வேண்டியும் அமைச்சர் ஆர்.பி உதயக்குமாரை சந்தித்து தமிழக பெண் அழகு கலை நிபுணர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் உரிய கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை!
- எப்பவும் போல காலையில ஒரே 'தகராறு'... ஆனாலும் கொஞ்சம் கோட 'யோசிக்காம'... கடைக்குட்டி மகனால் 'தாய்க்கு' நடந்த கொடூரம்!
- 'நிறைய பணம் வச்சுருக்கேன்...' 'கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கொடுத்து...' 'பொள்ளாச்சி போல்...' 3 வருடமாக மாணவிகளிடம் செய்த அட்டூழியம்...!
- ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!
- ரெண்டு 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு இப்டியா பண்ணுவ?... ஆத்திரத்தில் 'தங்கையை' கொலை செய்து... 'தலைமறைவான' அண்ணன்!
- ‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்?.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..!
- போதையில் 'வீட்டிற்கு' வந்த தந்தை... மகள் செய்த 'விபரீத' காரியம்!
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...' 'இன்று (மே.4) காலை 8.30க்கு தொடக்கம்...' 'எதில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தெரியுமா?...'
- 'முதியவர் கொலையில்' தெரியவந்த அதிரவைக்கும் 'உண்மைகள்'!.. 'மகன் மற்றும் மருமகளின்' நாடகம் 'அம்பலம்'!