மோடி அரசை விமர்சித்த திமுக எம்எல்ஏ.. உடனே அவை குறிப்பில் இருந்து நீக்கிய தமிழக சபாநாயகர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன்  துவங்கிய தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் மத்திய அரசை விமர்சித்துப்பேச, சபாநாயகர் அப்பாவு அதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

ஏமாற்றிய மத்திய அரசு

நேற்றைப்போல இன்றும் சட்ட மன்றத்தின் கேள்விநேரம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் சபையில் அமைதி நிலவியது. எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்ப, அமைச்சர்கள் அடுத்தடுத்து பதிலளித்தனர். சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாவதால் சபை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற்றன. கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் மண்ணெண்ணெய் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் மற்றும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தார் இனிக்கோ இருதயராஜ்.

அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தின் போது கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றார்.

TAMILNADUASSEMBLY, TAMILNADU, ASSEMBLY, தமிழகம், சட்டசபை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்