‘ஒரு கையால் பேஸ்புக் நேரலை’.. ‘இன்னொரு கையால் டாஸ்மாக்குக்கு பூட்டு!’.. தனி ஆளாக சென்று கெத்து காட்டிய பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்று சொல்லப்படும் கலைச்செல்வி என்பவர் நீண்டநேரம் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பூட்டு போட்டு அதனை நேரலையாக முகநூலில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலைச்செல்வியின் இந்த செயலால் அதிர்ந்து போன கடைகளின் உரிமையாளர்கள் 5 பேர் தத்தம் கடைகளை மூடினர். ஆனாலும் பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே இருந்த மதுபான கூடம் மட்டும் மூடப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு சென்ற கலைச்செல்வி அந்த மதுபான கூடத்தின் வெளிக் கதவை மூடி பூட்டு போட்டு விட்டார். பின்னர் அந்த சாவியை பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து மது விற்பனை செய்வோர் மீது புகார் அளித்தார்.
மது விற்பனை செய்வதற்கு டாஸ்மாக்கில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு நேரம் நிர்ணயித்துள்ள நிலையில், பல இடங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இளைஞர்களும் பெரியோர்களும் அதற்கு அடிமையாகி தத்தம் வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகவும், விடுமுறை தினங்களில் கூட 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும் கலைச்செல்வி குறிப்பிட்டுள்ளார்.
எனவே விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- "மாப்ள நம்ம ஆளுங்கள இறக்குடா?..." "ஒறண்டை இழுத்துட்டான் ஒருத்தன்..." 'டாஸ்மாக்' பார்-ஐ சூறையாடிய 'கும்பல்'...
- 'தீபாவளி தினம் முதல் 4 நாட்களுக்கு'... 'இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘மதுக்கடைகள் மூடல்’... ‘வெளியான அறிவிப்பு’!
- 'கடைய மூடிட்டு.. அதிக விலைக்கு விற்பனையா?'.. 'நள்ளிரவில் டாஸ்மாக் கஸ்டமர்களுக்கு நேர்ந்த கதி'!
- 'நா படிச்சு உன்ன காப்பாத்துறன்ப்பானு சொன்னாளே'.. குடிபோதை ஆசாமியால் 3 வயது சிறுமி பரிதாபம்!
- 'தடைகளைக் கடந்து'.. எளிமையாக நடந்த நந்தினி திருமணம்.. திருமணத்தில் எடுத்த உறுதிமொழி.. வீடியோ!
- 'அக்கா' நந்தினியைத் தொடர்ந்து, Tasmac-ஐ எதிர்த்த 'தங்கை' நிரஞ்சனா.. அதிரடியாக் கைது!
- டாஸ்மாக்குக்கு எதிராக 'ஒரே ஒரு கேள்விதான்'.. 'ஒரு வாரத்துல' கல்யாணம் ஆகப்போகும் மாணவிக்கு சிறை!
- 'அவளது மரணத்தில்தான் இது நடக்கணும்னு இருக்கு'.. விபத்தில் மனைவியை பறிகொடுத்த கணவர் செய்த உருக்கும் காரியம்!
- 'டாஸ்மாக்ல விக்குறது அந்த கறியா..?'.. பரவிய வீடியோ.. பதறிய குடிமகன்கள்.. பரபரப்பு சம்பவம்!