‘வீட்டுக்குள் அலறிய குழந்தை’.. பதறியடித்து வந்த உறவினர்கள்.. கணவன்-மனைவி சண்டையில் நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற குழந்தையை தந்தையே அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே உள்ள திருவாதிரைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இவரது மனைவி வேம்பு, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேம்பு கோபித்துக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை, உணவு சமைப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதிமோகன் மனைவி வேம்புவை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த தனது குழந்தையை பாரதிமோகன் தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை அலறி துடித்துள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பாரதி மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி சண்டையில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பொண்டாட்டிய கொல பண்ண... கார் ஆக்ஸிடண்ட், பாம்பு 'கடி'ன்னு... ஆறு மாசத்துல நெறய பிளான் பண்ணிருக்காரு, கடைசி'ல... மனதை உறைய வைக்கும் 'பின்னணி'!
- இரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை!.. பாகிஸ்தானியர் கைது!.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன?
- 'கட்டி போட்டு, காதுல பூச்சி மருந்து ஊற்றி கொலை...' 'குடிச்சிட்டு டிஸ்டர்ப் பண்ணிருக்காப்புல...' மனைவி, மகன், அம்மா 3 பேரும் சேர்ந்து தீத்துக் கட்டிட்டாங்க...!
- 'நாம சேர்ந்து வாழலாம், என் கூட வா...' 'இல்ல, நான் வரல...' 'ஆத்திரத்தில் வெறியான டிக்டாக் பிரபல இளைஞர்...' 'சந்தையில வச்சு...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...!
- 'ஓஹோ புருசனுக்கு இப்படி தான் டீ கொடுப்பியா'... 'கதறிய தாய்'... 'அலறியடித்து கிச்சனுக்கு ஓடிய குழந்தைகள்'... இப்படி ஒரு கணவன் இருப்பாரா?
- சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- '14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா...' 'வயிற்று வலின்னு போய் செக் பண்ணினப்போ தான் அந்த இடி விழுந்துருக்கு...' நிலை குலைந்து போன அம்மா...!
- காளிக்கு படைக்கப்பட்ட இளைஞர் ‘தலை’.. கோயில் வாசலில் நடந்த கொடூரம்.. மதுரையை மிரளவைத்த சம்பவம்..!
- 'நாலாபுறமும் சிதறி ஓடிய மக்கள்'... 'விரட்டி விரட்டி குத்திய இளைஞர்'... கொடூரனாக மாறிய இளைஞரின் அதிர்ச்சி பின்னணி!
- 'குடிசையில் தூக்கிட்ட சிறுமி...' 'லாரியில கடத்திட்டு போய்...' 'கூட்டு பாலியல் வன்கொடுமை செஞ்சுருக்காங்க...' பதபதைக்க செய்யும் கொடூரம்...!