‘அவன் சாவுல மர்மம் இருக்கு’.. அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கவேல். இவரது இளைய மகன் சதீஷ்குமார். இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் சதீஷ்குமார் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சதீஷ்குமார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மனைவி நித்யா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சதீஷ்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சதீஷ்குமாரின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜனவரி 22ம் தேதி மகன் சதீஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மாணிக்கவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் மரணத்தில் மர்மம் இருப்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் முன்னிலையில் சதீஷ்குமார் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. சதீஷ்குமாரின் மனைவி நித்யா பேச்சில் முரண் உள்ளாதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா? இல்லையா? என்பது தெரியவரும் என சதீஷ்குமாரின் சகோதரர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சனிக்கிழமைல இருந்து வெளியவே வரல’... மனைவி, குழந்தைகள் உட்பட ‘படுக்கையறையில்’ கிடைத்த ‘4 சடலங்கள்’... ‘ஐடி’ ஊழியர் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...
- 'ரகசிய' தொடர்பை துண்டித்ததால்... 'அண்ணியின்' முதுகில் கல்லைக்கட்டி... இளைஞர் செய்த 'கொடூர' சம்பவம்!
- ‘ஆதார்ல இப்படியா முகம் இருக்கும்?’.. ‘சந்தேகமா இருக்கே?’.. உயர் ரக ஹோட்டலில் தங்கியிருந்த பெண் செய்த அதிரவைத்த காரியம்!
- Video: 'குளிச்சு முடிச்சாச்சு' ஒரேயொரு தடவ... நண்பர்களின் 'கண்முன்னே'... இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்... 'வைரலாகும்' வீடியோ!
- ‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள்’.. ‘ஒரு நொடி சமயோஜிதத்தால் சிக்க வைத்த அமெரிக்க பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- திருப்பூரில் பயங்கரம்! நடுராத்திரியில் திடீரென 'அலறித்துடித்த' பெண்கள்... 'அதிர்ந்து' போன போலீசார்!
- 'எங்க புள்ளையே போயிட்டான்!.. அதனால'... உயிரிழந்த ஒரே மகனின் நினைவால்... பாசப் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!.. நெஞ்சை உலுக்கும் உண்மை சம்பவம்!
- உயிருடன் ‘சூட்கேஸில்’ அடைத்து ஆற்றில் வீசப்பட்ட தம்பதி.. ‘டூர்’ போன இடத்தில் நடந்த கொடூரம்..!
- 'மச்சான் செம பிளான் இருக்கு'...'நம்பி வந்த சிறுமி'...'நீலாங்கரையில் தனி வீடு'...சென்னையை உலுக்கிய கொடூரம்!