காதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆரணி அருகே பெண் ஒருவர் இளைஞருடன் சேர்ந்து காதலனை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஏரியில் கடந்த 18ஆம் தேதி ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவருடைய சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சுரேஷ் (38) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட சுரேஷின் அண்ணன் பாலு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அவருடைய உறவினர்கள் யாராவது தன் தம்பியைக் கொலை செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுரேஷைக் கொலை செய்ததாகக் கூறி அஜித்குமார் (21) என்பவர் ஆரணி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணவேணி தனக்கும் பழக்கமானவர் எனவும், அவரை சுரேஷ் திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு செய்துவந்ததால் அவர் கூறியே இந்தக் கொலையை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி சுரேஷை ஏரிக்கு வரவழைத்ததாகவும், அங்கு தான் அவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீசார் கிருஷ்ணவேணியைத் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...
- 'நேற்று மாலை வெளியே சென்ற குழந்தை'... 'இன்று காலை ஆடைகள் கிழிக்கப்பட்டு'... 'சிவகாசியில் பயங்கரம்!'...
- 'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...
- ‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’!.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- 10 நிமிஷத்துல 4 'குவார்ட்டர்' ... 'மது' குடிக்கும் போட்டியில்... வென்றவருக்கு 'நேர்ந்த' துயரம்!
- ‘விளையாட’ சென்ற ‘சிறுமி’ வீடு திரும்பாததால்... ‘பதறிப்போய்’ தேடிய பெற்றோர்... அடுத்த நாள் ‘காலை’ கிடைத்த ‘அதிரவைக்கும்’ தகவல்...
- 'காணாமல் போன மகன்'... 'தேடி அலைந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சொந்த அண்ணனால் நேர்ந்த கொடூரம்'... 'நீதிமன்றம் கொடுத்த தண்டனை'!
- 'பீர் பாட்டிலால் வந்த வினை'... 'திருவல்லிக்கேணி To கேளம்பாக்கம்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
- 'நேத்து ஸ்கூலுக்கு போன பொண்ணுங்க'... 'பெற்றோர் கதறல்!'... 'போலீஸ் அதிரடி'...