‘திடீரென’ பற்றிய தீ ‘மளமளவென’ பரவியதால்... கரும் ‘புகை’ மண்டலமான ‘சிப்காட்’ தொழிற்பேட்டை... ‘பயங்கர’ தீ விபத்தால் ‘பரபரப்பு’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கு ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய கிரீஸ், வாகன எண்ணெய் போன்றவற்றை சேமித்து வைக்கும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் மளமளவெனப் பரவி கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியே கரும் புகை மண்டலமாகக் காட்சியளித்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இந்நிலையில் வெளியில் எண்ணைய் பேரல்கள் அடுக்கப்பட்டு இருந்ததால், வெயிலின் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

FIREACCIDENT, TIRUVALLUR, GUMMIDIPOONDI, OILGODOWN, SIPCOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்