‘இந்த இடத்துல அடிக்கடி இப்டி நடக்குது’.. சென்னைக்கு வந்த ‘பூக்காரப் பெண்’.. நொடியில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செல்போன் பேசியபடியே தண்டவாளத்தைக் கடந்த பெண் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தும்பிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுந்தரி (35). இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல காலையில் திருத்தணியில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று பூக்களை வாங்கிவிட்டு, சென்னை செல்வதற்காக இரண்டாவது ரயில்வே கேட் வழியாக சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது சுந்தரி செல்போன் பேசியபடியே தண்டவாளத்தைக் கடந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயம் ரேணிகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக சுந்தரி மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதல் மற்றும் இரண்டாவது கேட்டை கடக்கும்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பேசியபடி செல்வதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் உயிரிழந்த சுந்தரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

TRAINACCIDENT, TIRUTTANI, DIES, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்