‘போன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டா’!.. ‘பழிவாங்கதான் அதை செஞ்சேன்’.. காதலனின் பகீர் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடன் பேசுவதை தவிர்த்ததற்காக காதலியின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாக காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சமயத்தில் தன்னுடன் பள்ளியில் படித்த 19 வயது பெண்ணை எதர்ச்சையாக சூலூரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் செல்போன் நம்பர்களை பகிர்ந்து பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பெண், தனது வீடியோக்களை அஜித்குமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து அஜித்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்த போலீசாரிடம் தெரிவித்த அஜித்குமார், நான் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவியை சந்திதேன். அதன்பின் இருவரும் காதலித்தோம். அவள் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறாள். இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப் காலில் பேசி வந்தோம். அந்த வீடியோக்களை எனது போனிலும், லேப்டாப்பிலும் சேமித்து வைத்திருந்தேன்.
திடீரென என்னுடன் பேசுவதை அவள் தவிர்த்தாள். பல தடவை போன் செய்தும் எடுக்கவில்லை. என்னுடைய போன் நம்பரையும் ப்ளாக் செய்துவிட்டாள். இதனால் அவளுடன் பேசமுடியவில்லை. நேரில் சென்று பேசினாலும் பேசாமல் சென்றுவிட்டாள். இதனால் பழிவாங்குவதற்காக அவளுடைய வீடியோக்களை என்னுடைய பேஸ்புக்கிலும் அவளுடைய உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பினேன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோக்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 3 பேருடன் சேர்ந்து.. 'இளம்பெண்ணை' காரில் கடத்தி... வன்புணர்வு செய்த போலீஸ்காரர்!
- பொண்ணுங்களுக்கு மட்டும் தான் .. உங்களுக்கு என்ன தோணுதோ செய்யலாம்?.. ஹைதராபாத் போலீசை 'விளாசும்' நெட்டிசன்கள்!
- பெண் 'மருத்துவரை' கொன்ற.. குற்றவாளிகளுக்கு.. சிறையில் 'மட்டன்', பருப்பு சாதம்!
- 'இவங்களலலாம் பொதுவெளிக்கு இழுத்துட்டு வந்து'.. பாலியல் குற்றவாளிகளுக்கு ஜெயா பச்சன் பரிந்துரைக்கும் 'பரபரப்பு' தண்டனை!
- ‘2 நாட்களுக்கு முன்பே’.. போலீஸாரிடம் ‘சிக்கித் தப்பிய குற்றவாளிகள்’.. ‘மருத்துவர் பிரியங்கா கொலையில் அதிர்ச்சி பின்னணி’..
- ‘வீடு புகுந்து 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை’! நிர்வாணமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்ற மக்கள்..!
- எஸ்ஐ-யா இருந்தா.. வேற மாதிரி 'கணக்கு' பண்ணிருப்பாரு.. 'வைரல்' வீடியோ!
- யாருக்காகவும் 'காத்திருக்க' வேண்டியதில்லை.. பெண் 'மருத்துவர்' கொலையில்.. 3 போலீசார் 'அதிரடி' சஸ்பெண்ட்!
- 'பாஷை தெரியாத ஊரு; பானிபூரி தான் சோறு!'.. தீரன் பட பாணியில்.. சென்னை போலீஸாரின் 5 நாள் வேட்டை!
- ‘நீ உயிரோடு இருந்தாதான பேசுவ’! ‘தோழியால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..!