"தம்பி திரும்ப போயிரு.. இங்க வேலை இல்ல".. வைரலாகும் பரபரப்பு வாசகம்.. எந்த ஊருப்பா இது!!🤔

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அவ்வப்போது நம்மை சுற்றி நடைபெறும் நிறைய விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

     Image may subject to © copyright to their respective owner.

Advertising
>
Advertising

அந்த வகையில், தற்போது திருப்பூர் மாவட்டம் குறித்து வாகனம் ஒன்றில் இடம்பெற்றிருந்த வாசகம், தமிழக மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

திருப்பூர் என்ற பெயரை நாம் கேட்டாலே உடனடியாக நாம் மனதில் தோன்றுவது துணி உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட விஷயங்களுக்கு பெயர் போனது என்பது தான். அதே போல, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோரும் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தி வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் சமீப காலமாக திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த நூல் மில்கள் சாயமிடுதல், ப்ளீச்சிங் எம்ப்ராய்டரி உள்ளிட்ட பல உப தொழில்கள் பல்வேறு காரணங்களால் கடும் சரிவையும் சந்தித்து வருகிறது.

அதே போல, வெளிநாடுகளில் இருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்காத காரணத்தினால் பல நிறுவனங்களும் மூடபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக வேலையிழந்த பலரும் வேறு வேலைக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது. ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட பல விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டு நிறைய இடங்கள் வாடகைக்கு விடப்படுவதாக பலகைகள் இருப்பதையும் காண முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

லட்சக்கணக்கில் மக்கள் தொழில் செய்து வரும் திருப்பூரில் தற்போது கடும் நெருக்கடியான சூழலும் உருவாகி உள்ளது. அங்குள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நெருக்கடிக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் பகுதியில் சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனம் என கூறப்படும் வண்டி ஒன்றில் எழுதப்பட்டுள்ள வாசகம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி அதிக கவனம் பெற்றும் வருகிறது.

இது தொடர்பாக வைரலாகி வரும் புகைப்படத்தின் படி, சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்றில் நம்பர் பிளேட்டுக்கு கீழ், "தம்பி திரும்ப போயிரு.. திருப்பூர்ல வேலை இல்லை" என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நிஜத்தில் இந்த வாசகம், திருப்பூர் நிலையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

TIRUPUR, UNEMPLOYED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்