ஐயப்பனை தரிசிக்க... பேருந்தில் சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள்... நடுவழியில் நடந்த பயங்கரம்... 18 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்றப் பேருந்து, லாரி மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிவடைந்துள்ளது. இதையடுத்து மகர விளக்கு சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டமாக, பேருந்து மூலம் சபரிமலைக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.

ஐயப்ப பக்தர்களின் பேருந்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. அதன்பின்னர் பஞ்சர் ஆகி நின்ற காரின் மீது அடுத்தடுத்து மோதியது. இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த பக்தர்கள், திடீரென ஏற்பட்ட விபத்தால் அலறினர். இந்த விபத்தில் திருப்பூரை சேர்ந்த தர்மலிங்கம் என்ற பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பக்தர்கள் 17 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பூபதி உள்ளிட்ட 5 பக்தர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு, இவ்வாறு நேர்ந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DEVOTEES, PILGRIMS, KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்