‘மாஸ்க்’ போடாத ‘வாகன ஓட்டியிடம்’ சாதியை கேட்ட ‘காவலர்’!... ‘வீடியோ வெளியானதால்’ சர்ச்சை!.. எஸ்.பியிடம் இருந்து ‘பறந்த’ உத்தரவு.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் முகக்கவசம் அணியாதவர்களிடம் சாதியை விசாரித்த காவலரின் செயல் சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகி சர்ச்சைக்குரியதாக மாறியது.

திருப்பூர் பெருமாநல்லூரில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டிவந்த நபர்களை மறித்து, அபராதம் விதித்து வந்த காவலர் ஒருவர், அவ்வாறு மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டி ஒருவரிடம் சாதி பெயரை கேட்டுள்ளார்.

இதனால் அந்த வாகன ஓட்டி, “அபராதத் தொகையை வேண்டுமானால் கட்டுகிறேன். அதற்காக சாதியை கேட்கலாமா நீங்கள்? இது முறையா? உங்களை யார் இப்படி கேட்கச் சொல்லுகிறார்கள்? அது விதிமுறையில் உள்ளதா?” என கேள்வி கேட்டு வீடியோவும் எடுத்து பதிவிட்டுள்ளார். அவருடன் வந்த பெண்மணியும் காவலரை எதிர்த்து கேள்விகளை கேட்டார். 

இணையத்தில் வெளியான இந்த வீடியோ பலரது கண்டனத்துக்கும் உள்ளாகியது. இதனால் வாகன ஓட்டியியம் சாதியை கேட்ட அந்த காவலர் காசிராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அம்மாவட்ட எஸ்.பி திஷாமிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்