ஒரு லட்சம் பேர் 'அந்த' ஃபேக் ஆப் இன்ஸ்டால் பண்ணிருக்காங்க...! 'இதுவரை 20 லட்சம் ரூபாய் அபேஸ்...' - எம்.டெக் இளைஞரின் ஹைடெக் மோசடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் போலியான செயலியை உருவாக்கி அதன் மூலம் 20 லட்சம் மோசடி செய்தவரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொத்திபாளையத்தைச் சேர்ந்த யுவராஜா என்னும் இளைஞர், காரக்பூரில் உள்ள ஐஐடியில் எம்.டெக் படித்துள்ளார்.

எம்.டெக் மாணவரான யுவராஜா கடந்த 2016ஆம் ஆண்டு அவரே சுயமாக ரயில்வே தட்கல் முன்பதிவுக்காக போலியாக செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார். மேலும் யுவராஜா உருவாக்கிய செயலியை இதுவரை சுமார் 1 லட்சம் பேர் ஆன்டிராய்டு செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செயலி மூலம் இதுவரை யுவராஜ் 20 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ரயில்வே பாதுகாப்புப்படையினர் தற்போது யுவராஜாவை கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்