'இந்தியாவில் முதன் முறையாக... கொரோனா பரவலைத் தடுக்க... சந்தையில் 'கிருமிநாசினி சுரங்கம்' அமைத்த திருப்பூர்!'... அசத்தும் ஆட்சியர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனாவைக் கட்டுப்படுத்த திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகின்றன. இந்த முன்னெடுப்புகளில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட நிர்வாகத்தின் பங்கு மிக முக்கியமானது.
மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று தீவிரமானதையடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் நேரம் மதியம் 2.30 வரை குறைக்கப்பட்டது. இதனால், முன்பை விட தற்போது காலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில், அதிக மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதனை தடுக்கும் விதமாக திருப்பூரில் காலையில் சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் சந்தையில், அத்திவாசியப் பொருட்களை வாங்க வரும்போது மக்கள், கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குள் 3 முதல் 5 நொடிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டு, அதன் பின் கைகழுவிய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பூரில் கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவங்க எல்லார்க்கும் உணவு கிடைக்கனும்!'... அம்மா உணவகத்தில் 'இட்லி' சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- ‘எது? கொரோனா டெஸ்ட்டா? ஆள வுடுங்கடா சாமி!’.. ‘ஓடும் பேருந்தில் இருந்து எகிறி குதித்து ஓடிய இளம் பெண்’.. வீடியோ!
- 'கொரோனாவுக்கு இந்த தடுப்பூசி’... ‘நல்ல பலன் தரும்’... ‘அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள்’... ‘வெளியிட்ட புதிய தகவல்’!
- 'மனித சடலம் தான் உரம்'...'அமோக விளைச்சலுக்கு பின்னாடி இருக்கும் கோரம்'...நடுங்க வைக்கும் தகவல்!
- 'கொரோனாவை தடுக்க... கோதுமை விளக்கு வழிபாடு!'... காட்டுத்தீ போல் பரவிய தகவலால்... சென்னையில் பரபரப்பு!
- 'வேலிடிட்டி' அதிகரிப்பு... 'இலவச' வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்... பிரபல நிறுவனத்தின் 'அதிரடி' அறிவிப்பு...
- '1,131 பேர்' தமிழகத்துக்கு 'வந்துள்ளனர்'... '515 பேர்' மட்டும் 'அடையாளம்' காணப்பட்டுள்ளனர்... 'மீதம் உள்ளவர்கள்...' 'ப்ளீஸ் நீங்களாகவே வந்துருங்க...' 'சுகாதாரத்துறை வேண்டுகோள்...'
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'ஹலோ பாஸ் என்னது இது'... 'அணிவகுத்த பைக்குகள்'...ஜாம் ஆன 'சென்னையின் பிரபல மேம்பாலம்'!
- கடந்த '24 மணி' நேரத்தில் மட்டும்... இதுவரை இல்லாத 'உச்சகட்ட' உயிரிழப்பு... 'மார்ச்சுவரிகளில்' இடமின்றி 'ட்ரக்குகளில்' உடல்கள்... 'கலங்கி' நிற்கும் 'அமெரிக்கா'...