‘போலீசில்’ சேர ஆசை... ‘இன்ஜினியரிங்’ பட்டதாரி செய்த ‘அதிர்ச்சி’ காரியத்தால்... ‘கடைசியில்’ நேர்ந்த ‘கோரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்லடம் அருகே போலீசாரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலீஸ் உடை அணிந்த இளைஞர் ஒருவர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்மீது உள்ளூர் மக்களுக்கு சந்தேகம் ஏற்படவே, அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரித்ததில், அந்த இளைஞர் போலியாக போலீஸ் உடை அணிந்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது வேலம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த இளைஞரின் இருசக்கர வாகனம் முன்னால் சென்ற சரக்கு வேனின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகான விசாரணையில், உயிரிழந்த நபர் பல்லடம் அனுப்பட்டி அருகே உள்ள கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான எஸ்.அஜித்குமார் (23) என்பதும், போலீசில் பணிக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் அது முடியாமல் போகவே, போலீஸ் உடை அணிந்து நடித்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிறந்த நாள் கொண்டாடிவிட்டு’... ‘வீடு திரும்பிய இளைஞர்களுக்கு’... 'நடந்தேறிய பரிதாபம்'!
- 'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்!
- ‘வினையாக’ முடிந்த விளையாட்டு... தாயின் ‘சேலையை’ வைத்து விளையாடிய... 12 வயது ‘சிறுவனுக்கு’ நேர்ந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘விபத்தில்’ சிக்கிய பெண்ணை ‘மீட்க’ சென்றபோது ‘காத்திருந்த’ பயங்கரம்... ‘20 நாட்களாக’ தேடப்பட்டுவந்த ‘குடும்பத்திற்கு’ நேர்ந்த துயரம்...
- ‘வேளாங்கண்ணி’ கோயிலுக்கு சென்ற குடும்பம்.. ‘பாதிவழியில் பஞ்சரான கார்’.. நொடியில் நடந்த கோரவிபத்து..!
- லாரி ‘மோதியதில்’ மேம்பாலத் தடுப்பை ‘உடைத்துக்கொண்டு’... ‘50 அடி’ பள்ளத்திற்குள் ‘பாய்ந்த’ கார்... ‘காப்பாற்ற’ சென்றவர் உட்பட 3 பேருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- 35 ‘ஐடி’ ஊழியர்களுடன் கிளம்பிய பேருந்து... ‘சுற்றுலா’ சென்றவர்களுக்கு... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...
- ‘சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து’... ‘ஊர் திரும்பியபோது’... ‘கார் கவிழ்ந்து’... ‘புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘அமெரிக்கா செல்லும்’... ‘பெற்றோரை வழியனுப்ப வந்த’... ‘ஒட்டு மொத்த குடும்பத்திற்கு’... ‘திடீரென திரும்பிய லாரியால் நிகழ்ந்த பயங்கரம்'!
- திருச்சி அருகே பயங்கரம்...'கோயிலுக்கு' சென்றுவிட்டு திரும்பியபோது... கிணற்றுக்குள் 'பாய்ந்த' கார்... 'சம்பவ' இடத்திலேயே 3 பேர் பலி!