'என்ன பாவம் செஞ்சோம்'... 'உனக்கு இரக்கமே இல்லையா'... 'இந்த தம்பிக்கு வயசு 22 தான்'... நெஞ்சை உடைக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்னும் நம் கண் முன்பு என்ன சோகத்தை எல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. அந்த அளவிற்கு கொரோனா தான் எவ்வளவு கொடூரமானவன் என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி, அவிநாசிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இவருக்கு கொரோனா'தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நோய் தோற்று எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரக் காலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறையினர் தகவல் அளித்தனர். அவரது சடலத்தை சுகாதாரத்துறை விதிகளின்படி, அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 116 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்த சூழ்நிலையில் 22 வயதே ஆன 108 ஆம்புலன்ஸ் ஊழியரான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த மாசம்' தான் அண்ணனோட 'ஆட்டமே இருக்கு...' "இனி லட்சத்துல பாப்பீங்க..." 'அதிர்ச்சிமேல்' அதிர்ச்சியளிக்கும் 'ஆய்வுத் தகவல்...'
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!
- இந்த 3 விஷயம்... கொரோனா கிட்ட இருந்து 'உங்கள' பாதுகாக்கும்: இந்திய மருத்துவ கவுன்சில்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை!. அறிகுறியின்றி தொற்று உறுதியானதால் பரபரப்பு!
- "கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டாரா பாபா ராம்தேவ்?".. பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
- "இசை மழையில் நீங்கள் நனையத் தயாரா?".. தாவரங்களை நாற்காலியில் அமர்த்தி இசை கச்சேரி!.. என்ன காரணம்?
- "எப்படி வண்டிய எடுக்குறீங்கனு பாக்குறேன்!"..'தாய்ப்பாசத்தால் இளைஞர் செய்த காரியம்!'.. கைகலப்பு சம்பவம்.. வீடியோ!
- மதுரையில் மேலும் 137 பேருக்கு கொரோனா!.. தேனியிலும் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ கடந்தது!.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி!