'புருஷன் வேலைக்கு போனதும் நான் போவேன்'... 'அதிரவைத்த சிறுவன்'...பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 14வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா தேவி. இவர்களுக்குத் திருமணமாகி கோமன்குமார், சத்தியம் குமார், ஆகிய 2 மகன்களும், துளசி குமாரி என்ற மகளும் உள்ளனர். வேலைக்காகத் தமிழகம் வந்த இவர்கள், குடும்பத்துடன் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த பொங்கல் பண்டிகையின் போது மிதுன் தாதியாவிற்கும், ஷீலா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கணவர் மிதுன் தாதியா தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்துக்கொண்டு, பீகாருக்கு சென்று விட்டார். ஆனால் ஷீலா கணவருடன் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் ஷீலா தேவியின் வீட்டு கதவு நேற்று காலை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. காலையில் வேலைக்கு செல்லும் அவர், வெகுநேரம் ஆன பின்பும் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஷீலா தேவி பிணமாகக் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷீலா தேவியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது கழுத்தில் காயம் இருந்தது. எனவே கழுத்தை நெரித்து ஷீலா தேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

பீகார் மாநில பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளியைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஷீலா தேவிக்கும், கொங்குநகரில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. நாட்கள் செல்ல செல்ல இந்த பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. கணவன் மிதுன்தாதியா வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிற்கு வரும் சிறுவனுடன் ஷீலா தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மனையின் நடவடிக்கை குறித்து அறிந்த கணவர் மிதுன்தாதியா, ஷீலாவை கண்டித்துள்ளார். வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி சிறுவனுடன் தகாத உறவில் இருக்கிறாயே என சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மிதுன்தாதியா பீகாருக்கு சென்று விட்டார். ஆனால் ஷீலா தேவி கணவருடன் ஊருக்குப் போகாமல் திருப்பூரில் தங்கி விட்டார். கணவர் ஊருக்கு சென்றதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஷீலா தேவி, சிறுவனுடன் அடிக்கடி தனிமையிலிருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் ஷீலா தேவி வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து ஷீலா தேவியுடன் தொடர்பிலிருந்த அந்த சிறுவனைப் பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவன் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச்செய்தது. அதில், '' ஷீலாவின் கணவன் வேலைக்குச் சென்றதும், அவரை பார்க்கச் செல்லும் அவன், ஷீலாவுடன் தனிமையிலிருந்து வந்துள்ளான்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஷீலா தேவியின் வீட்டிற்கு சென்ற சிறுவன் உல்லாசத்திற்கு ஷீலா தேவியை அழைத்துள்ளான். ஆனால் அவர் இன்று முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இது சிறுவனுக்கு ஆத்திரத்தை வரவைத்துள்ளது. இதையடுத்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற சிறுவன் ஷீலா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MURDER, KILLED, POLICE, TIRUPPUR, MARRIED WOMAN, ILLEGAL AFFAIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்