காலிங் பெல் வேலை செய்யல.. போனையும் எடுக்கல... வீட்டின் பின்புறம் சடலமாக கிடந்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியை அடுத்த தாயப்பார் என்ற இடத்தில் வசித்து வந்தவர் தென்னரசு. இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
இதனிடையே, சமீபத்தில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் தென்னரசு. அந்த சமயத்தில் வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாத நிலையில் மனைவிக்கு பலமுறை அவர் போன் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் மனைவி நல்ல தூக்கத்தில் இருந்தால் கணவனின் அழைப்பையும் எடுக்காமல் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை வரை கணவர் வராததால் தனது உறவினருக்கு தகவலை கூறியுள்ளார் புனிதா. அப்போது தென்னரசுவின் பைக் வெளியே இருந்ததாகவும் தெரிய வர, அவரது எண்ணிற்கு அழைத்த போது அருகே மொபைல் சத்தம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது அங்கே வீட்டின் பின் புறத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் தென்னரசு.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, வீட்டிற்கு செல்ல மூன்றாவது மாடிக்கு பின்புறம் சென்று பைப்லைன் வழியாக தென்னரசு ஏறிய போது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால், தென்னரசு உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னரசு நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரைப் பிடித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தரப்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | ICC : கேப்டன் பட்லர்.. அணியில் மாஸ் காட்டும் முக்கிய இந்திய வீரர்கள்.. பரபர லிஸ்ட்..!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உங்க வீட்டுக்குள்ள புதையல் இருக்கு".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- எல்லாத்துக்கும் Bike தான் காரணமா?.. இளைஞர் செய்த செயலால் மனமுடைந்த குடும்பம்.!
- "காப்பாத்துங்க".. காட்டில் இருந்து எரிந்த உடலுடன் ஓடி வந்த இளம்பெண்.. தமிழகத்தையே நடுங்க வைத்த பரபரப்பு சம்பவம்!!
- சென்னை : இருசக்கர வாகனத்துக்கு வாட்டர் வாஷ் செய்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலி !! பதைபதைப்பு சம்பவம்..
- "பெட்ரோல் போட காசு இல்லண்ணா".. போலீஸ் கிட்ட உதவி கேட்ட இளைஞர்.. அடுத்த நிமிஷமே நடந்த நிகழ்வு.. மனசை தொட்ட காவலர்!!
- "பசங்க கைவிட்டுட்டாங்க".. ஆதரவற்ற பாட்டிக்கு இளைஞர் செய்த உதவி.. கண்கலங்கி அவங்க சொன்ன வார்த்தை.. வீடியோ..!
- காதல் கை கூடல... விபரீத முடிவை எடுக்க நினைத்த இளம்பெண்.. அப்படியே தலைகீழான சம்பவம்!!.. பரபர பின்னணி!!
- வெளிநாட்டில்.. காருக்குள் இருந்த இந்திய இளைஞர் உடல்??.. போனில் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!
- விமான பயணம் செய்து இளம்பெண்ணை தேடி வந்த வாலிபர்.. நேரில் பார்த்ததும் செய்த காரியம்!! பதைபதைக்க வைத்த சம்பவம்
- "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!