கோயிலுக்கு சென்றபோது... விபத்துக்குள்ளான லாரி மீது மோதி... பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவர்களின் டெம்போ டிராவலர் விபத்துக்குள்ளானதில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இருந்து ஆந்திராவுக்கு கொசு அடிக்கும் பேட்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, நேற்று நள்ளிரவு வந்தவாசி - செய்யாறு சாலையில் எச்சூா் கிராமம் அருகே எச்சூர் என்ற கிராமத்தில் சிறு பாலம் மீது மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில்  கிருஷ்ணகிரி மாவட்டம் தல்சூரில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற டெம்பா டிராவலர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்த அந்த லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் டெம்போ டிராவலரில் பயணம் செய்த பக்தர்கள் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோயிலுக்கு சென்றவர்கள் காயமடைந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, ACCIDENT, TEMPO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்