மலேசிய பெண்ணுடன் காதல்.. "ஜாம் ஜாம்ன்னு கல்யாணமும் முடிஞ்சுது.. ஆனா, அதுக்கப்புறம் தான்.." நெல்லை இளைஞர் போட்ட பிளான்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மலேசிய பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், பரபரப்பை கிளப்பி உள்ளது.

மலேசிய பெண்ணுடன் காதல்.. "ஜாம் ஜாம்ன்னு கல்யாணமும் முடிஞ்சுது.. ஆனா, அதுக்கப்புறம் தான்.." நெல்லை இளைஞர் போட்ட பிளான்
Advertising
>
Advertising

மலேசியா நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் கவிதா. இவருக்கும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு, சமூக வலைத்தளம் மூலம் பஹக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், துபாய் நாட்டிற்கு வேலைக்கும் சென்றுள்ளார் இம்ரான்.

சமூக வலைத்தளம் மூலம் பழக்கம்

இதன் பின்னர், கவிதா மற்றும் இம்ரான் ஆகியோரின் நட்பு, சமூக வலைத்தளத்தில் இருந்து அடுத்த கட்டமாக செல்போன் வரைக்கும் சென்றது. இருவரும் பல மணி நேரம் செல்போனில் பேசி பொழுதினை கழித்து வந்ததாக தெரிகிறது. அடுத்ததாக, அவர்கள் காதலிக்க தொடங்கி உள்ள நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் திட்டம் போட்டுள்ளனர்.

கல்யாணமும் முடிஞ்சுடுச்சு..

மலேசியாவில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என, கவிதாவிடம் இம்ரான் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு வந்த கவிதாவுக்கும், இம்ரானுக்கும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகு, இம்ரான், கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், மலேசியா கிளம்பிச் சென்றுள்ளனர்.

பணத்துடன் துபாய் பயணம்..

மலேசியாவில் சிறிது நாட்கள் கவிதாவுடன் இருந்த இம்ரான், அங்கிருந்து துபாய் கிளம்பிச் சென்றுள்ளார். துபாய் செல்வதற்கு முன்பாக, கவிதாவிடம் இருந்து சுமார் 15 லட்ச ரூபாயை இம்ரான் வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், துபாய் சென்ற இம்ரான், தனது மனைவியுடன் பேசுவதை குறைத்து கொண்டதாக தெரிகிறது.

புகார் கொடுத்த மனைவி

இது பற்றி, பலமுறை கவிதா கேட்ட போது, மலேசியாவில் இருந்து திருநெல்வேலி வந்து தங்கினால் தான்,  குடும்பம் நடத்த முடியும் என இம்ரான் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு மத்தியில், கவிதா கர்ப்பம் அடையவும் செய்துள்ளார். தொடர்ந்து, நெல்லை திரும்பிய கவிதா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இம்ரான் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனையடுத்து, நெல்லை ஆட்சியர் உதவியுடன் துபாயில் இருந்து, இம்ரானை நெல்லைக்கு வரச் செய்துள்ளனர். கவிதாவின் புகார் தொடர்பாக விசாரித்த போலீசார், இம்ரான் மீது குற்றம் இருப்பதை உறுதி செய்து, அவர் மீது சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைதும் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளம் மூலம், மலேசியாவில் வாழ்ந்து வந்த பெண்ணை ஏமாற்றி, அவரை கர்ப்பம் அடைய செய்து, இளைஞர்  ஏமாற்றிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

LOVE, MARRIAGE, YOUTH, CHEATED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்