ஆற்றில் குளிக்க போன மனைவி வீடு திரும்பல.. நைட் முழுக்க தேடிய கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற பெண் கை, கால்கள் கட்டப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மனைவி மாதா (வயது 50). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இரவு வெகு நேரமாகியும் மாதா வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து இரவு முழுவதும் கணவர் சுடலைக்கண்ணு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஆற்றின் அருகில் முட்புதரில் மாதா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தத சுடலைக்கண்ணு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் மாதாவை மர்ம நபர் யாரோ அடித்து கொன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாதா வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். குளித்து விட்டு வரும் வழியில், யாராவது தாக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும், தடயவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கழிவு நீரில் நிர்வாணமாக மிதந்த பெண் சடலம்.. ஆடு மேய்ப்பவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஆத்தூரில் பரபரப்பு..!
- டிப்டாப் டிரெஸ்.. நள்ளிரவு வீட்டு கேட்டை நைசா திறக்கும் மர்ம பெண்.. அதுக்கப்புறம் செய்யும் செயல்.. சிசிடிவி பார்த்து ‘ஷாக்’ ஆன மக்கள்..!
- பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்.. நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி! திருச்சி அருகே பரபரப்பு..!
- ஏம்மா அழுதுட்டு இருக்க.. கண்ணீருடன் மனைவி சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆடிப்போன கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!
- அமெரிக்க பெண்ணை 6 வாரம் டார்ச்சர் செய்த 3 ஈக்கள்.. எப்படி உடம்புக்குள்ள வந்துச்சு? இந்திய மருத்துவர்கள் செய்த சாதனை
- அதெப்படி இன்னொருத்தர் கூட நிச்சயம் பண்ணலாம்.. பக்கத்துவீட்டுக்காரரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கடைசியில் நடந்த சோகம்..!
- ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 42 வயது பெண்.. 17 வருச கண்ணீருக்கு முற்றுப்புள்ளி.. கணவர் வைத்த உருக்கமான வேண்டுகோள்..!
- டான்சருடன் உருவான காதல்.. லவ்வர்'ன்னு நம்பி கூல் டிரிங்க்ஸ் குடிச்சதில் பெண்ணுக்கு வந்த வினை.. பதற வைக்கும் சம்பவம்
- ‘லண்டன் பொண்ணு’.. வாட்ஸ் அப்பில் வந்த பெண் குரல்.. சென்னை முதியவருக்கு நடந்த அதிர்ச்சி..!
- ‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!