'தமிழக அரசின் சின்னத்தை எங்க பதிச்சிருக்காங்க'... 'சர்ச்சையாகும் டைல்ஸ்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிப்பறைகளில், தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான இலவச கழிவறைகள் கட்டிகொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்ஷா பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் 508 கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் இச்சாவாரி என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 13 கழிவறைகளில், மகாத்மா காந்தி, தேசியக்கொடியில் உள்ள தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக டைல்ஸ்களை உடைத்து எடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி சந்தோஷ்குமார் என்பவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சின்னம் கொண்ட டைல்ஸ்கள் உத்தரப் பிரதேசம் வரை சென்றது எப்படி என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்'... 'இந்த ஆண்டே தமிழகத்தில் நடைமுறை'!
- பிளக்கும் வெயில்.. ‘ஸ்பெஷல் சர்வீஸ்’ கொடுக்கும் ‘கவர்மெண்ட் பஸ் கண்டக்டர்’.. நெகிழும் பயணிகள்!
- பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த 'நெல் ஜெயராமன்'... சிறப்பித்த தமிழக அரசு!
- ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி..! 500 ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்..!
- ‘இவ்வளவு டிஎம்சி காவேரி தண்ணிய தமிழ்நாட்டுக்கு குடுங்க காவேரி மேலாண்மை வாரியம் அதிரடி’.. கலக்கத்தில் கர்நாடகா!
- 'தமிழகத்திலேயே முதல் முறையாக'.. திருநங்கை திருமணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!
- 'அக்னி வெயில் குறையுமா'?... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- ‘ப்ளீஸ் இத பண்ண வேண்டாமே’..நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. வேண்டுகோள் வைத்த சென்னை குடிநீர் வாரியம்!
- நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!
- 'இப்ப இதுக்கும் டூப்ளிகேட் வந்துருச்சா'.. சிக்கிய ஃபாரின் கும்பல்.. மிரளவைக்கும் தகவல்கள்!