எப்போதும் காதல் மன்னன்.. எல்லாருக்கும் பிடித்த TIK TOK பாஸ்கரன் திடீர் மரணம்.. சோகத்துடன் வைரலாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று காரணமாக சினிமா நட்சத்திரங்கள் உயிரிழந்து வந்தநிலையில், பிரபல டிக் டாக் பிரபலம் பாஸ்கரன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தற்போதைய உலகம் இணைய உலகமாக மாறிவிட்டது. இன்னும் சொல்ல போனால் ஒருவரை ஒருவர் இணைக்கும் உலகம். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தால் வெகுஜனத்தினர் கட்டுண்டு கிடக்கின்றனர். டிக் டாக் வீடியோக்கள் மூலம் பலரும் தங்களின் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி, தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். 

சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளிட்டு வருகின்றனர். இதன் மூலம் பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளது. டிக் டாக் போன்ற செயலிகள் சாமானியர்களையும் பிரபலமடையச் செய்தது. அவர்களுக்குள் இருக்கும் கலைஞனை வெளிக்கொண்டு வந்தது.

டிக் டாக் பாஸ்கரன்

இப்படி டிக் டாக்கிள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் தான் பாஸ்கரன். இவர் நகைச்சுவையான டிக் டாக் வீடியோக்களைப் பார்த்து பலரும் இவரைப் பின்தொடர ஆரம்பித்தனர். இவர் காதல் பாடல்களுக்கு அதிகமாக ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம்.  இதனால் இவரை  செல்லமாக Remo பாஸ்கரன் Daddy எல்லோரும் அழைக்கின்றனர்.  இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து பாஸ்கர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தார். தனது தோழிகள் தொல்லை செய்ததால் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோக்களை செய்வேன் என்றும் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மரணம்

"எனக்கு பிடித்த வசனங்களை டைரியில் குறித்து கொள்வேன். அதேபோன்று காதல் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று இவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் மரணமடைந்துள்ளார். இந்த செய்திஅறிந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரித்து அவரது வீடியோக்களை சேர் செய்கின்றனர்.

TIK TOK BASKARAN, CORONA INFECTION, REMO, DADDY, BASKARAN DIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்