‘ஒரே ஒரு செகண்ட் தான்’... ‘மழைக்காக ஒதுங்கியபோது’..‘இடி, மின்னலால்’... ‘பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மழைக்காக கூடாரத்தில் ஒதுங்கிய பெண்கள் மீது, இடி, மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே, வைத்தூர் கிராமத்திலிருந்து, செம்பாட்டூர் கீழமுட்டுக் காடு பகுதிக்கு, 38 பெண்கள் விவசாய கூலி வேலைக்கு சென்றபோது தான், இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. கடலை கொல்லையில், கடலை பறிக்கும் பணியில், பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அந்தப் பெண்கள் அருகில் இருந்த கூடாரத்தில், மழைக்காக ஒதுங்கியுள்ளனர். இந்நிலையில், பலத்த சப்தத்துடன், இடியும், மின்னலும் அந்தப் பெண்கள் மீது தாக்கியது.

இதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த பெண்களின் உறவினர்களையும், சந்தித்து பேசினார். பின்னர் அவர், உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதற்கிடையில், காஞ்சிபுரம் அருகே  மரம் வெட்டிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் இடி தாக்கியதில் பலியானார். அதேபோல், திருவாடனை அருகே வயலில் வேலை பெண் ஒருவர் இடி தாக்கி உயிரிழந்தார். மழை காலங்களில் வேலை செய்யும்போது, இடி, மின்னல் தாக்காதவாறு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

THUNDER, STORM, LIGHTNING, WOMEN, ACCIDENT, PUDUKKOTTAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்