'அந்த சமாதில போய் உக்காருங்கனு.. ஐடியா குடுத்ததே நான்தான்.. இன்னும் நிறையா.. வெளில சொல்ல முடியாது!'.. 'போட்டுடைத்த குருமூர்த்தி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டத்தில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, ‘சசிகலாவை முதலமைச்சர் ஆக்குவதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ்-ஐ கவனிக்கச் சொல்லியிருந்தார்கள். அப்போது அவர் என்னிடம் வந்தார். நீங்கலாம் ஆம்பளையா ஏன் இருக்கீங்கன்னு தெரியலனு கேட்டேன். அவரும் என்ன சார் பண்லாம்னு கேட்டேன். நீங்க போய் இந்த சமாதியில உக்காருங்க சார். உங்களுக்கு எதாவது வழி பிறக்கும்னு சொன்னேன்’ என்று கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியது. இதனை அடுத்து #ஓபிஎஸ்நீங்காஆம்பிளையா என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. 

இந்நிலையில் அவர் தனது இந்த கருத்துக்கு மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்,  அதன்படி ‘ஓ பி எஸ் சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில்  குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் பெரிய சக்தி திமுக தான்  என்றும், ரஜினியைப் பொருத்தவரை, அவர் ஆட்சிக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்ல என்றும் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

OPANNEERSELVAM, GURUMURTHY, THUGLAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்