'வாய்ப்பு கிடைச்சும் விளையாட முடியலியே'... 'சோகத்தில் இருந்த ரசிகர்கள்'... ட்விட்டர் மூலம் சஸ்பென்ஸை உடைத்த நடராஜன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ட்விட்டரில் நடராஜன் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டி20 போட்டி தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில்கூட விளையாட முடியவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஆனால் இன்றையப் போட்டியில் நடராஜன் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. அதேநேரத்தில் நடராஜனின் காயம் பூரண குணமடைந்து அவர் வலைப்பயிற்சியும் தொடங்கிவிட்டார். வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நடராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்குப் பின்பு இந்திய அணிக்காக நடராஜன் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடராஜன் "உங்களின் மனதுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்தால் தினசரி அந்தப் பணித் தானாகவே உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இந்திய அணியினருடன் இணைந்ததில் மகிழ்ச்சி" என தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் நடராஜன். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனி பார்க்க தான போற... இந்த காலியோட ஆட்டத்த'!.. முதல் மேட்ச்சிலேயே மாஸ் காட்டினதுக்கு... பிசிசிஐ கொடுத்த 'வாவ்' சர்ப்ரைஸ்!!
- 'அம்பையரை குறை சொல்றது இருக்கட்டும்'... 'இத பத்தி மட்டும் பேச மாட்டீங்களா கோலி'... பொங்கியெழுந்த கிரிக்கெட் விமர்சகர்கள்!
- VIDEO: ‘இதையும் அம்பயர் சரியா பார்க்கலையோ?’.. சர்ச்சையை கிளப்பும் அடுத்த வீடியோ..!
- 'ப்பா... அவங்க கண்ண பாருங்களேன்... பயம்னா என்னனே தெரியல'!.. மேட்ச்சின் நடுவே... அதிர்ச்சியில் ஆடிப்போன கேப்டன் கோலி!
- ‘திடீரென டிரெண்டாகும் ரோஹித்’!.. எல்லாத்துக்கும் ‘காரணம்’ இதுதான்.. நெட்டிசன்கள் வைக்கும் ஒரு கோரிக்கை..!
- ‘இது நடக்கும்னு 3 வருசத்துக்கு முன்னாடியே இவருக்கு எப்படி தெரியும்..?’.. திடீரென வைரலாகும் ஆர்சரின் ‘பழைய’ ட்வீட்..!
- 'அட... 'இவரு' தான் பா நேத்து மேட்ச்ல heart piece!.. சூரியகுமார் யாதவை விட இவருக்கு தான் செம மவுசு'!.. அப்படி என்ன செய்தார்?
- ‘அடி தூள்’!.. ‘அவர் பெயரும் லிஸ்ட்ல இருக்கு’.. ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பிசிசிஐ..!
- ‘இதை மனசுல வச்சுகிட்டு பந்து வீசு’!.. ஒரே ஓவரில் தலைகீழாய் மாறிய மேட்ச்.. அப்படி என்ன ‘சீக்ரெட்’ சொன்னார் ரோஹித்..?
- கடைசி நேரத்துல ‘ரோஹித்’ கிட்ட கேப்டன்சியை கொடுக்க என்ன காரணம்..? போட்டி முடிந்தபின் ‘கோலி’ கொடுத்த விளக்கம்..!